February 21, 2021

ஆன்லைன் அடியாட்களை கையாள்வது எப்படி | Block trolls with crowd sourced platform

Twitter பயன்படுத்தும் பலருக்கு ஆன்லைன் அடியாட்கள் பரிச்சயமாகியிருப்பார்கள். ஆபாசமாக பேசுவது, மிரட்டல்கள் விடுப்பது, அவதூறு செய்வது என நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்த கீழ்த்தரமாக இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிற ஒரு கூட்டம். 




நசுக்க, நசுக்க எங்கிருந்தோ வரும் மூட்டைப்பூச்சிகள் போல, வந்துகொண்டே இருப்பார்கள். ஒவ்வொருத்தரையும் ப்ளாக்க, ஆகும் நேரச்செலவும் அதிகம். 

 இந்த அடியாட்களை தடுக்கவும், தவிர்க்கவும் சில மென்பொருட்கள் இருந்தாலும், அதில் Jacob உருவாக்கிய Blocktogether மென்பொருள் மிகவும் பிரபலமானது மற்றும் கோடிக்கனக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டது. கடந்த மாதம் அந்த சேவை அவரது பணிச்சுமை காரணமாக நிறுத்தப்பட்டு விட்டது. 

 அவரது மென்பொருளில் சில மாற்றங்களுடன் நாம் www.letsblock.in எனும் தளத்தை ஆரம்பித்துள்ளோம்.  ஆரம்பித்த ஒருவாரத்திற்குள்ளாகவே பலர் நமது தளத்தை பயன்படுத்திக்கொண்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. மேலும் பலர், இதனை எப்படி பயன்படுத்துவது என கேட்டுக்கொண்டிருப்பதனால் இந்த பதிவு.

 
இந்த தளத்திற்கான அவசியம் தற்போது என்ன?

பல வருடங்களாக ட்விட்டர் பயனாளியாக நான் பார்த்தவரையில் தமிழ் கீச்சர்களிடம் சற்று குரூப்பிசம் இருந்தாலும், ஆபாச தாக்குதல்கள், மிரட்டல்களை சில ஆண்டுகளுக்கு முன் நான் அதிகம் பார்த்ததில்லை. இந்த நிலை வேகமாக மாறி வருவதாக எனக்கு சமீபமாக தோன்ற ஆரம்பித்தது. முக்கியமாக எனது நட்பு வட்டத்தில் இருந்த சில பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். இந்த ஆன்லைன் அடியாட்களை ப்ளாக் பண்ணுவது சுலபம் என நினைத்தாலும், அவர்கள் எண்ணிக்கையை பார்க்குபோது, தனிநபராக செயல்டுவதில் உள்ள நேரவிரயத்தை தவிர்க்கவும், ஒரே கருத்துடைய நண்பர்கள் இணைந்து உருவாக்கும் ப்ளாக்லிஸ்ட் அவர்களை மிகவும் சுலபமாக ப்ளாக் பண்ண உதவும் என்பதாலும் இந்த தளத்தை உருவாக்கி இலவசமாக (விளம்பரங்கள் இல்லாமலும்) இதனை தருகிறோம்.

ட்விட்டர் ப்ளாக்கை விட எப்படி இது சிறந்தது?

ட்விட்டர் தளம் ப்ளாக்லிஸ்ட் தறவிரக்கவும் அதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் வசதிகளை சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்திருக்கிறது. அதில் இருக்கும் ஒரே குறை, லிஸ்டை புதுப்பிக்க ஒவ்வொரு முறையும் தறவிறக்கம் செய்து நண்பர்களுக்கு அனுப்ப வேண்டும். 

LetsBlock.in பயன்படுத்தும் போது, லிஸ்ட் தினமும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
 
 
எப்படி வேலை செய்கிறது?

இது ஒரு crowd-source மென்பொருள். அதாவது, இதனை பயன்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர் அவர் ப்ளாக் பண்ணியிருக்கும் நபர்களின் பட்டியலை அவருடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் ப்ளாக்குகள் செயல்படுத்தப்படும். அதிக பயனர்கள் பயன்படுத்தும் போது அதிக "இணைய அடியாட்களை" ப்ளாக் பண்ண முடியும்.


 Letsblock.in தளத்திற்கு சென்று "Login with Twitter" வழியாக தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நண்பர்களின் ப்ளாக்லிஸ்ட்டை "Subscribe" பண்ணுவதன் மூலம் அவர் ப்ளாக் பண்ணிய அனைவரையும் உடனே ப்ளாக் பண்ணலாம்.

விரிவான விளக்கங்களுக்கு இந்த காணொலியை பாருங்கள்.



 
மேலதிக தகவல்கள் அல்லது உதவிக்கு @LetsBlock_IN OR @birianiac