December 14, 2010

தற்காலிக மின்னஞ்சல் சேவைகள்

சில தளங்களை பார்வையிட பதிவு செய்ய வேண்டியிருக்கும். நமது மின்னஞ்சல் முகவரியை தரும்போது அவர்கள் Spam mailகளை அனுப்ப வாய்ப்புள்ளது. பதிவு செய்வதை தவிர்த்து ஏறகனவே பதிவு செய்த login களை Bugmenot.com இணையதளத்தில் எடுத்து பயன்படுத்தினாலும் சில தளங்களில் அவை வேலை செய்வதில்லை. பல தளங்களுக்கு Login இருப்பதில்லை. எனவே Verification Mail களுக்காகவும் spam mail களை தவிர்க்கவும் Disposable Email எனும் தற்காலிக மின்னஞ்சல் முறையை பயன்படுத்தலாம். அதனை இலவசமாக தரும் 6 தளங்களை இப்போது பார்க்கப்போகிறோம்.



1. Mailinator:


                        இந்த தளத்தில் பெறும் மின்னஞ்சல் முகவரிகளை 48 மணி நேரம் வரை உபயோகிக்க முடியும். இதில் உள்ள RSS Feed மூலமாக உங்கள் Reader-லேயே மின்னஞ்சல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள்




                                  இவர்கள் தரும் மின்னஞ்சல் முகவரியை 3 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். மற்ற வசதிகள் mailinator போலவே இருந்தாலும், இதில் நமக்கு பிடித்த முகவரியை வைத்துக்கொள்ள முடியாது  இவர்கள் தருகின்ற wmn09pssbah52lp@h.mintemail.com போன்ற மின்னஞ்சல் முகவரியைத்தான் பயன்படுத்த வேண்டும். :P



                             7 நாட்கள் வரை இவர்களிடம் பெறும் மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கலாம். இவர்கள் தரும் inbox, Password Protected. (மற்றவைகளில் இது கிடையாது). மேலும் RSS Feed வசதியும் உள்ளது. 10$ கட்டினால் Premium Account ம் தருகிறார்கள்.


                                      இதன் மின்னஞ்சல் முகவரியை 1 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் yourname@guerrillamailblock.com என மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக்கொள்ள முடியும். இவர்களும் Premium Account வசதி வைத்துள்ளனர்.



                                    இதில் RSS Feed வசதி உள்ளது. மேலும் மின்னஞ்சல்களை Forward செய்ய முடியும். மேலும் SSL உபயோகிப்பதால் secure சேவை தருகிறார்கள். இவர்கள் தரும் inbox 4 MB அளவுடையது. இதில் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே complex ஆக முகவரிகளை அமைத்துக்கொள்வது நல்லது. (like knsankar1988chennai@mailmetrash.com)


                                                                     இதில் yourname@onewaymail.com என மின்னஞ்சல் முகவரியை அமைத்துக்கொள்ளலாம். இதிலும் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே படித்த மின்னஞ்சல்களை உடனே அழிப்பது நல்லது. அல்லது Complex Username வைத்துக்கொள்ள வேண்டும். இதன் inbox 3 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.

 உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம் :)