December 14, 2010

தற்காலிக மின்னஞ்சல் சேவைகள்

சில தளங்களை பார்வையிட பதிவு செய்ய வேண்டியிருக்கும். நமது மின்னஞ்சல் முகவரியை தரும்போது அவர்கள் Spam mailகளை அனுப்ப வாய்ப்புள்ளது. பதிவு செய்வதை தவிர்த்து ஏறகனவே பதிவு செய்த login களை Bugmenot.com இணையதளத்தில் எடுத்து பயன்படுத்தினாலும் சில தளங்களில் அவை வேலை செய்வதில்லை. பல தளங்களுக்கு Login இருப்பதில்லை. எனவே Verification Mail களுக்காகவும் spam mail களை தவிர்க்கவும் Disposable Email எனும் தற்காலிக மின்னஞ்சல் முறையை பயன்படுத்தலாம். அதனை இலவசமாக தரும் 6 தளங்களை இப்போது பார்க்கப்போகிறோம்.



1. Mailinator:


                        இந்த தளத்தில் பெறும் மின்னஞ்சல் முகவரிகளை 48 மணி நேரம் வரை உபயோகிக்க முடியும். இதில் உள்ள RSS Feed மூலமாக உங்கள் Reader-லேயே மின்னஞ்சல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள்




                                  இவர்கள் தரும் மின்னஞ்சல் முகவரியை 3 மணி நேரம் வரை உபயோகிக்கலாம். மற்ற வசதிகள் mailinator போலவே இருந்தாலும், இதில் நமக்கு பிடித்த முகவரியை வைத்துக்கொள்ள முடியாது  இவர்கள் தருகின்ற wmn09pssbah52lp@h.mintemail.com போன்ற மின்னஞ்சல் முகவரியைத்தான் பயன்படுத்த வேண்டும். :P



                             7 நாட்கள் வரை இவர்களிடம் பெறும் மின்னஞ்சல் முகவரியை உபயோகிக்கலாம். இவர்கள் தரும் inbox, Password Protected. (மற்றவைகளில் இது கிடையாது). மேலும் RSS Feed வசதியும் உள்ளது. 10$ கட்டினால் Premium Account ம் தருகிறார்கள்.


                                      இதன் மின்னஞ்சல் முகவரியை 1 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் yourname@guerrillamailblock.com என மின்னஞ்சல் முகவரி உருவாக்கிக்கொள்ள முடியும். இவர்களும் Premium Account வசதி வைத்துள்ளனர்.



                                    இதில் RSS Feed வசதி உள்ளது. மேலும் மின்னஞ்சல்களை Forward செய்ய முடியும். மேலும் SSL உபயோகிப்பதால் secure சேவை தருகிறார்கள். இவர்கள் தரும் inbox 4 MB அளவுடையது. இதில் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே complex ஆக முகவரிகளை அமைத்துக்கொள்வது நல்லது. (like knsankar1988chennai@mailmetrash.com)


                                                                     இதில் yourname@onewaymail.com என மின்னஞ்சல் முகவரியை அமைத்துக்கொள்ளலாம். இதிலும் உங்கள் முகவரியை மட்டும் வைத்து வேறு ஒருவர் உங்கள் மின்னஞ்சல்களை பார்க்க முடியும். எனவே படித்த மின்னஞ்சல்களை உடனே அழிப்பது நல்லது. அல்லது Complex Username வைத்துக்கொள்ள வேண்டும். இதன் inbox 3 நாட்கள் வரை உபயோகத்தில் இருக்கும்.

 உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். அடுத்த பதிவில் சந்திப்போம் :)

October 18, 2010

கூகுள் வாய்ஸ்... இந்தியாவிற்கு....

                                       கூகுள் வாய்ஸ் வசதியானது தற்போது U.S.A க்கு மட்டும் இலவசமாக தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனை இந்தியாவில் பெறுவது எப்படி என்பதை விளக்கவே இந்த பதிவு.
                                        இதனை பெறுவதற்கு உங்களிடம் USA incoming நம்பர் இருக்க வேண்டும். அதனைப் பெறுவது எப்படி என்பதை முதலில் பார்ப்போம்.

1) USA Incoming Number:

                                             முதலில் TPAD தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.


 


பின்னர், tpad-ல் login செய்யவும். (உங்கள் TPad Number மின்னஞ்சலில் அனுப்பப்பட்டிருக்கும்)

 
அடுத்ததாக IPkal தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்,
 




பதிவு செய்தவுடன், மின்னஞ்சலில் உங்கள் IPKall எண் அனுப்பி வைக்கப்படும்.


இப்போது இந்த என்னை உங்கள் IP Phone-ல் configure செய்து கொள்ளவும்.

                                     இதனை இந்த தொடுப்பிலிருந்து தறவிறக்கலாம்.
இப்போது உங்களுக்கு ஒரு USA incoming Number தயார்.

2. கூகுள் வாய்ஸ்:
                                          இதனை உங்கள் browser-ல் திறக்கும்போது கீழே காட்டப்பட்ட message காட்டப்படும்,
எனவே இதனை proxy மூலமாக உங்கள் ஐ.பி-யை மாற்றிவிட்டு பின்னர் முயற்சிக்கவும்.  (நான் உபயோகித்த tool Hotspot Shield 1.2 )

                                 இப்போது கூகுள் வாய்ஸ் -ல் Login செய்யவும்,
அதில் கீழே காட்டப்பட்டுள்ள window-ல் உங்கள் விருப்பப்படி Area code அல்லது எதாவது வார்த்தையை Type செய்யவும்.

அடுத்ததாக புதிய PIN -ஐ  தரவும். (இது வாய்ஸ்மெயில் வசதிக்காக)
 
அடுத்த Step-ல் உங்கள் IPKall எண்ணைத் தரவும் (Incoming Number).

அடுத்ததாக உங்களுக்கு ஒரு அழைப்பு SoftPhone-க்கு வரும். அதில் உங்கள் verifiction எண்ணை கேட்கும் போது அதனை தரவும்.

இப்போது உங்களுக்கு கூகிள் வாய்ஸ் தயாராகி விட்டது. இனி நீங்கள் Proxy இல்லாமலேயே உங்கள் Google Voice ஐ பயன்படுத்தலாம்.
                            இதில் உங்களுக்கு வ்ரும் Incoming Calls, & SMS அனைத்தும் உங்கள் SoftPhone-க்கு forward செய்யப்படும். அதனை உங்கள் Google Talk -க்கு மாற்றிக்கொள்ளவும்.


           இனி உங்களுக்கு வரும் Incoming calls& Sms அனைத்தும் உங்கள் GTalk -க்கு Forward செய்யப்படும். 
 
அடுத்த பதிவில் சந்திப்போம்.


July 3, 2010

PDF பைலின் பாஸ்வேர்டை உடைக்க.......

 



உங்களிடம் உள்ள ஒரு PDF file பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கலாம். அந்த கோப்புகளை பாஸ்வேர்டு இல்லாமல் திறப்பதற்கு, சிரமப்படவே தேவையில்லை. கீழே காட்டியுள்ள தளத்தின் மூலமாக அந்த கோப்புகளை பாஸ்வேர்டை நீக்கி படிக்கலாம்.

1. PDF Crack :
                     

   இந்த தளத்தில் 5எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.


2. Free My PDF :

இந்த தளத்தில்7 எம்.பி அளவிலான கோப்புகளை இலவசமாக திறக்க முடியும்.


உங்கள் கருத்துக்களை பதியுங்கள்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

April 10, 2010

லினக்ஸ் விண்டோஸ் பாஸ்வேர்டு HACKING

ஒரு லினக்ஸ் அல்லது விண்டோசின் கணிணியோட பாஸ்வேர்டை உடைக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு KonBoot மென்பொருளைக் கொண்டு மிக எளிதில் உடைத்துவிட முடியும். இது Boot ஆகும் பொழுதே இயங்குதளத்தின் Kernel ல் மாற்றங்களை செய்து விடுகிறது. இதன் மூலம் Administrator அல்லது root ன் Privilege உடன் லாகின் செய்ய முடியும்.

இந்த மென்பொருள் Ubuntu லினக்ஸ்க்கு உருவாக்கப்பட்டது என்றாலும் இது அனைத்து லினக்ஸ் Distribution லும் வேலை செய்கிறது.விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றிலும் வேலை செய்கிறது.

லினக்ஸ்-ல்:

1.Kon-boot CD or Floppy வழியாக Boot செய்யவும்.
2.Boot ஆனவுடன் console mode க்கு செல்லவும்.
3. அதில் Login ஆக kon-usr என type செய்யவும்.


விண்டோஸ்-ல்:
Kon-boot CD or Floppy வழியாக Boot செய்யவும். பின்னர் உங்கள் profile ல் எதாவது ஒரு பாஸ்வேர்டை type செய்யவும்.

Floppy Image – http://www.piotrbania.com/all/kon-boot/data/FD0-konboot-v1.1-2in1.zip
CD ISO Image – http://www.piotrbania.com/all/kon-boot/data/CD-konboot-v1.1-2in1.zip

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png 

February 14, 2010

வெப்சைட் ஹேக் by DDos

                DDos என்பது பற்றி சில நண்பர்களுக்கு தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் http://en.wikipedia.org/wiki/Denial-of-service_attack இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்.

               இந்த பதிவில் DDos க்கு நான் உபயோகிக்கும் ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்துகிறேன்.
                    Low Orbit Ion Cannon என்பது C# ல் எழுதப்பட்ட மென்பொருள் ஆகும். (அதன் Download link ஐ தரப்போவதில்லை Try googling). இந்த மென்பொருள் அதிக internet speed ல் நன்றாக வேலை செய்யும்.  உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரே தளத்தை Attack செய்து Website Down செய்ய முடியும்.

 

 Down பண்ண வேண்டிய தளத்தின் முகவரியை URL Box ல் கொடுத்து Lock On ஐ  Click செய்யவும்.

Threads என்பதில் 9001 ஐ கொடுப்பது Efficient ஆக இருக்கும்.

பின்னர் "IMMA FIRIN MAH LAZAR!" என்னும் Button ஐ Click செய்தால் Attack start ஆகிவிடும்.

உங்கள் Hacking அனுபவத்தை Command ல் சொல்லுங்கள்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

February 12, 2010

Task Manager Fix

எனது கணிணியில் பலமுறை  வைரசால் பாதிக்கப்பட்ட போது Task Manager Disabled என்னும் பிழைச்செய்தி வந்தது. பெரும்பாலும் வைரஸ், ட்ரோஜன், மால்வேர்கள் Taskmanager ஐ disable செய்கின்றன. அதனால், நம்மால் அதன் process ஐ நிறுத்த முடிவதில்லை. அதனை மீண்டும் சரி செய்வதற்கான 5 வழிமுறைகள் கீழே தந்துள்ளேன்.




Methode 1:

  • Group Policy Editor வழியாக சரி செய்யலாம்..
  • Start,  Run , அதில் gpedit.msc என்று டைப் செய்யவும்.
  • அதில் User Configurationல் Administrative Template ஐ Expand(+) செய்யவும்
  • அதில் System ஐ Expand செய்து Ctrl+Alt+Del ஐ க்ளிக் செய்யவும்
  • அதில் Remove Task Manager என்பதனை Click செய்து அந்த Optionல் Not Configured என்பதனை தேர்வு செய்யவும்.
Methode 2:

  • Start, Run ல் கீழே உள்ள Command ஐ கொடுப்பதன் மூலம் சரி செய்யலாம்.
  • REG add HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System /v DisableTaskMgr /t REG_DWORD /d 0 /f  


Methode 3:
  • Notepad ல் கீழே உள்ள வரிகளை Paste செய்யவும்
  • [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
    “DisableTaskMgr”=dword:00000000
  • பின்னர் அதனை Taskmanager.reg என save செய்து அதை ஒபென் பண்ணுவதன் மூலமாக சரி செய்யலாம் 

Methode 4:

  • Start, run ல் regedit என்று Type செய்யவும்
  • அதில் HKEY_CURRENT_USER \ Software \ Microsoft \ Windows \ CurrentVersion \ Policies\ System    என்ற இடத்தில் Disable Task manager என்ற Value ஐ அழித்துவிடவும்.

Me3thode 5:

  • Task Manager Fix என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்யவும்
  • அதனை Run செய்வதன் மூலம் Task Manager ஐ Restore செய்ய முடியும். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

    January 17, 2010

    வெப்சைட் Block பண்ண புதிய வழி

    வீட்டில் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் இணையதளங்களை குழந்தகள் பார்க்கா வண்ணம் தடை செய்ய பல Parantal Control மென்பொருட்களை பயன்படுத்துகின்றனர். அவ்வகை மென்பொருட்கள் இலவசமாக கிடைப்பதில்லை. மேலும் அவற்றை இலகுவாக ஏமாற்றி சில தளங்கள் வந்து விடுகின்றன. இதற்கு புதிய வழி ஒன்றை இந்த பதிவில் தந்துள்ளேன்.


    www.opendns.com என்னும் தளம் இந்த வசதியை இலவசமாக தருகிறது.

    இதில் ஒரு இலவச கணக்கை துவங்கவும்.












    பின்னர் உங்கள் ஐ.பி -யை Add செய்யவும்.





    இதற்கு ஒரு அடையாள பெயரை தரவும்.







    Catagory wise Block பண்ண முடியும்.





    பின்னர் உங்கள் Local Area Connection -ன் DNS-ல்

    208.67.222.222
    208.67.220.220 Add பண்ணவும். 








    பின்னர் 3 நிமிடத்தில் உங்கள் DNS setup செயல்பட ஆரம்பிக்கும். பின்னர் Block List -ல் உள்ள தளங்கள் உங்களுக்கு செயல்படாது.







    கணிணியில் Local Area Connection  -ல் DNS ஐ.பி சேர்ப்பதற்கு பதிலாக உங்கள் DSL Router -ம் பண்ண முடியும்.
    மேலதிக தகவல்களுக்கு http://www.opendns.com/support/videos/  ஐ பார்க்கவும்.





    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png