December 29, 2009

Chat -ல் ஐ.பி யை கண்டுபிடிக்க புதிய வழி...

Chat பண்ணும் பொழுதோ அல்லது யாராவது நண்பர்களுடைய ஐ.பி யை கண்டிபிடிக்க வேண்டும் என்று சிலர் மின்னஞ்சலில் கேட்டிருந்தனர். அது எப்படி என்பதனை விளக்கியுள்ளேன்.

1. முதலில் IP Finder Script ஐ பதிவிறக்கவும்.

2. அந்த Archive -ல் ip.php மற்றும் ip_log.txt என்ற இரண்டு கோப்புகளையும் Extract
செய்யவும் .

3. அந்த இரண்டு கோப்புகளையும் ஏதவது ஒரு இலவச Hosting provider -ல் Upload
செய்யவும்.

4.இப்போது www.yourname.x10hosting.com/ip.php என்ற லிங்க் ஐ உங்கள் நண்பருக்கு
chat-ல் அனுப்பவும். (Url ஐ ஷொர்ட் ஆக்குவது, ip.php -யை index.php ஆக்குவது
என முடிந்த வரை சந்தேகம் வராமல் பண்ணுங்கள்)

5.இப்போது உங்கள் நண்பர் அந்த லின்க்-கை கிளிக் செய்தால், அவரது ஐ.பி ip_log.txt Fileல் 79.93.144.25 Thursday 29th of Dec 2009 05:31:27 AM என்பது போல இருக்கும்.

இது பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இடுங்கள்...

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

December 15, 2009

ஐ.பி மறைக்க புதிய முறை.........

உங்கள் ஐ.பி-யை மறைக்க Online proxy, proxy software என பயன்படுத்துகிறீர்களா? அதற்கு மாற்றாக மிக எளிமையான மற்றும் விரைவான வழி VPN.

இந்த இலவச VPN வசதியை www.itshidden.com தளம் வழங்குகிறது. இதனை எப்படி உபயோகிப்பது,
முதலில் அந்த தளத்தில் இலவச உறுப்பினராகுங்கள்,
அதில் பதிவு செய்த பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு ஒரு புதிய VPN ஐ உங்கள் கணிணியில் setup செய்யுங்கள்.

இது பற்றிய வீடியோ கீழே,

இது பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

December 8, 2009

சாப்ட்வேர் ப்ராக்சி.....

ஒரு சில ஆன்லைன் ப்ராக்ஸி தளங்களை நாம் உபயோகித்திருப்போம், அவை பெரும்பாலும் நாம் பார்க்க விரும்ம்பும் தளங்களை சரியாக காட்டுவதில்லை. மேலும் விளம்பரங்கள், பாப்-அப்புகள் என ரொம்பவே எரிச்சலூட்டுகின்றன.
இதற்கு மாற்றாக நாம் சாப்ட்வேர் ப்ராக்ஸியை உபயோகிக்க முடியும். இந்த இடுகையில் Ultra Surf 8.9 என்கிற மென்பொருளை பற்றி பார்ப்போம்.

இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் சாதாரணமாக Browsing பண்ண முடியும். இதனை உபயோகிக்கும் போது Net Speed எப்பொழுதும் போலவே இருக்கும். இதனை பதிவிறக்க , பயனர் கையேடு.

மேலும் இதேபோல் Free Gate என்னும் மென்பொருள் Anonymous surfing -க்கு பயன்படுத்தப் படுகிறது. இது சீனாவில் தடை செய்யப்பட்ட தளங்களை பார்ப்பதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது.

Download Free Gate

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடவும்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1MIXF28w8lwg7CUNxOy4k8x8aqQmSUOyQYw4RoOpuqTEFfxlBbS7F6ofeOIph-W2LGFMGhvHgzdNTp_-AtgmaW3zPP8HBhHX9DmGhnK2t0-FiW1FopGc6AVvmIUO8ufO0O7LFEpLpJE3U/s1600/D3B73BA4BF186FBFB7BE7B1EC0CE2F9D.png

December 6, 2009

ஒரே நிமிடத்தில் உங்களுக்கு அழகான ஒரு வெப்சைட்

ஒரே நிமிடத்தில் அழகான வெப்சைட் தயார் செய்வது மட்டுமில்லாமல் 175 Network Functions உள்ள ஒரு மென்பொருளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகவே இந்த இடுகை.

முதலில் http://www.mabsoft.com/NetTools5.0.70.zip என்னும் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். (.Net Framework தேவைப்படும்)

இதில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனை http://www.mabsoft.com/nettools.htm என்னும் தளத்தில் பார்க்கவும். (175 -ம் டைப் பண்ண முடியல :-))

இப்போது, Net tools-ல் Start –> Exterior Tools –> File Tools –> Ultra fast Website Maker –> Quickweb க்ளிக் செய்யவும்.

Wizard-ல் உங்களுக்கு பிடித்த Project Type -ஐ தேர்வு செய்யவும்.

இங்கே உங்களுக்கு பிடித்த டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும்.

உங்கள் Website Title , Auther மற்றும் Unicode Support (கண்டிப்பாக தேர்வு செய்யவும்) ஆகியவற்றை தேர்வு செய்யவும்.

இப்போது , உங்கள் Webpage- ஐ Save செய்யவும். Thats it.

இப்போது ஒரு அழகான இணையப்பக்கம் ஒரே நிமிடத்தில் தயார்.

உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பதிவு செய்யவும்.