September 17, 2009

பென்டிரைவில் XP இன்ஸ்டால் செய்யலாம்..

பென்டிரைவில் உபயோகிக்க பல இயங்குதளங்கள் (Operating Systems) வந்தாலும் அவை Windows Xp அளவுக்கு நன்றாக இருப்பதில்லை.



Windows Xp ஐ பென்டிரைவில் இன்ஸ்டால் பண்ண முயற்சி செய்யும் போது (Hard disk இல்லாமல்)
(Hard disk Not Found) என்ற பிழைச்செய்தி கிடைத்தது. இதனை சரி செய்ய வேண்டுமெனில் நமது பென்டிரைவை Hard disk formatting Tool ஒன்றை உபயோகிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நான் உபயோகித்த Tool, HP USB FW.


இதன் மூலம் Format செய்த பின்னர் பென்டிரைவில் இன்ஸ்டால் ஆகத்துவங்கியது.
Windows Xp அதற்கென 1.5 ஜிகா பைட்டுகளை எடுத்துக்கொள்ளும். எனவே உங்கள் பென்டிரைவ் அதற்கு மேல் இருக்க வேண்டும்.


உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

September 16, 2009

Wi-fi ஹேக்கர்களை கண்டுபிடியுங்கள்....

நமது பழைய பதிவில் wi-fi Hacking பற்றி பார்த்தோம். மற்றவர்கள் நமது Wi-fi ஐ உபயோகிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளவும், அவர்கள் எங்கிருந்து உபயோகிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவும் ஒரு மென்பொருள் ஒன்றை அண்மையில் பார்த்தேன். அதன் பெயர், Moocher hunter.

இது ஒரு இலவச மென்பொருள்,
மேலும் இதில் உபயோகிக்கப்பட்டுள்ள அல்காரிதம் moocher ஐ துல்லியமாக கணிக்கிறது. ஆனால் அவரை கண்டுபிடிக்க உங்கள் லேப்டாப்-ம் isolated antenna -ம் தேவைப்பயும். அது பற்றிய வீடியோ கீழே,




September 9, 2009

நீங்களே உருவாக்கலாம் portable softwares...

பென் டிரைவ்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை என் நண்பனிடமிருந்து வாங்கி பயன் படுத்த தொடங்கியபோது எனக்கு அதிக போர்ட்டபிள் சாப்ட்வேர்கள் தேவைப்பட்டது. பெரும்பாலானவற்றை நான் www.portableapps.com ல் இருந்து எடுத்தாலும் நான் உபயோகிக்கும் சில மென்பொருட்களை இதில் பெற முடியவில்லை. நாமே போர்ட்டபிள் அப்ப்ளிகேசங்களை தயாரிக்க முடியும் என்பதை கூகுளின் புண்ணியத்தால் அறிந்தேன். அதன் பெயர் thinstall.

கீழே போர்ட்டபிள் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செய்த படங்கள்.



இதனை run பண்ணிய பின்னர் இன்ஸ்டால் செய்யும் சாப்ட்வேர்களை இது கேப்சர் செய்கிறது. அவை பின்னர் லிஸ்ட் செய்யப்படுகிறது.


இந்த லிஸ்டில் உள்ள சாப்ட்வேரில் தேவையானதை தேர்ந்தெடுத்து Next கொடுக்கவும்,
முடிந்தவுடன் Build என்பதை Run பண்ணவும்,


இப்போது இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போர்ட்டபிளாக மாறி விட்டது.
இது போல அனைத்து மென்பொருட்களையும் போர்ட்டபிளாக மாற்ற முடியும்.

September 6, 2009

XP time -ல் உங்கள் பெயர்.....

நண்பர்களே, 5 நாளாக பதிவெழுத முடியாத அளவுக்கு ரொம்ப (வெட்டி) வேலை.
அதுக்கப்புறம் ஏன்டா மொக்கை விஷயத்தை வீடியோவோட எழுதுறேன்னு நண்பர்கள் டென்ஷனாகக் கூடாது. அடுத்த பதிவுல யூஸ் புல்லா எழுதுவேன். இப்போ அந்த வீடியோ,




பாத்துட்டீங்கள்ள? அப்ப ஒரு command போடுறதுதானே?