August 25, 2009

உங்கள் சாப்ட்வேரை picture-ல் மறைக்க...

உங்களுடைய சாப்ட்வேர்கள் மற்றும் அனைத்து பைல்களையும் picture-ல் மறைக்க முடியும். சாதரணமாக ஒப்பன் செய்தால் அது படமாகத்தான் காட்டப்படும்.

முதலில் ஒரு jpg பைல் மற்றும் மறைக்க வேண்டிய rar பைலையும் ஒரு போல்டரில் போடவும், பின்னர் command வழியாக அந்த directory க்குள் லாகின் செய்யவும்.
பின்னர் கீழே உள்ளது போல command கொடுக்கவும்.

copy /b filename.jpg + filename.rar outputname.jpg (படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.)

இப்போது outputname.jpg என்ற பைல் ஒன்று உருவாகியிருக்கும்.
இதனை சாதாரணமாக திறக்கும் போது படமாகத்தான் ஓப்பன் ஆகும்.


















இதனை open with.. winrar வழியாக திறக்கும் போது filename.rar என்னும் பைல் திறக்கும்.


































இந்த command மூலமாக அனைத்து வகையான பைல்களையும் படத்துக்குள் மறைக்க முடியும்.

இது பற்றிய கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.

14 comments:

  1. பாஸூ, அது எப்புடி, கிரிமினலாவே யோசிக்கிறீங்க? நீங்க சொல்ற எல்லாமே சைபர் க்ரைம் மாதிரியே இருக்கு. கேட்டா இல்லைனு சொல்றீங்க. ரைட்டு விடுங்க. தொடர்க உமது சேவை....

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி கவின். இது மாதிரி சின்ன tips சைபர் க்ரைம் அளவுக்கு இருக்காதுன்னு நினக்கிறேன். தவறு இருந்தால் கண்டிப்பாக சுட்டிக்காட்டவும்.


    நவநீதசங்கர்

    ReplyDelete
  3. சங்கர் இதெல்லாம் சைபர் கிரைம் கிடையாது. நம்மோட பர்சனலான விஷயங்களுக்குள்ள அடுத்தவங்க முக்கை நுழைக்காம இருக்கறதுக்கு தேவையான விஷயங்கள்தான் இவை எல்லாம். என்ன செக்யூரிட்டி போட்டாலும் கண்டுபிடிச்சு நம்ம்மோட பர்சனல் விஷயங்களை திருடுறவங்ககிட்ட இருந்து தப்பிக்குறதுக்கு இதெல்லாம் ரொம்ப முக்கியம். என்னோட பாஸ்வேர்ட் எல்லாம் Hack பண்றவங்க கிட்ட மாட்டிகிட்டு நான் பட்ட கஷ்டம் எல்லாம் எனக்குதான் தெரியும். தேங்க்யூ சங்கர். தொடர்ந்து இந்த மாதிரி எழுதுங்கள்.

    ReplyDelete
  4. புதுசாயிருக்கு மேட்டரு..
    மயிண்ட்ல வச்சிக்கிறேன்!

    நிறைய எழுதுங்க பாஸ்..

    ReplyDelete
  5. பகிர்ந்து கொண்டதுக்கு மிகவும் நன்றி சங்கர்...

    ReplyDelete
  6. என்ன சங்கர் அண்ணே! பதிவு போட்டு ஆறு நாள் ஆச்சு. அவ்ளோ busyஆ?

    ReplyDelete
  7. இதில் காணப்படும் வலைபூக்கள் அனைத்தும் தொழில்நுட்ப வலைபூக்கள் இங்கு நான் சில தொழில்நுட்ப சில வலைபூக்கள் இணைத்துள்ளேன் இதில் உங்கள் வலைபூக்கள் இணைக்கவில்லை என்றால் இந்த இமெயில் முகவரிக்கு உங்கள் வலைப்பூ முகவரியை அனுப்பி வைக்கவும்

    இமெயில் முகவரி: infokajan@ymail.com

    வலைபூங்கா.காம்

    ReplyDelete
  8. நன்றி, திருச்சிகாரன்,கலையரசன். ஆறு நாள் கொஞ்சம் வேலை அதிகம்தான் கவின். உங்கள் பின்னூட்டத்தை பார்த்தவுடன் உடனே ஒரு இடுகை போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  9. இது தெவை பட்டது சங்கர்

    ReplyDelete
  10. அய்யா!//முதலில் ஒரு jpg பைல் மற்றும் மறைக்க வேண்டிய rar பைலையும் ஒரு போல்டரில் போடவும், பின்னர் command வழியாக அந்த directory க்குள் லாகின் செய்யவும்// command வழியாக directory க்குள் login எப்படி செய்வது.விளக்குங்களேன்

    ReplyDelete
  11. அருமை... நண்பா.

    ReplyDelete
  12. தோழரே இது வேலை செய்யவில்லை எனக்கு உதவுங்கள்
    please

    ReplyDelete